Skip to main content

السلام عليكم ورحمة الله وبركاته

Muslim Month in Tamil

Muslim Month in Tamil   இஸ்லாமிய    (அரபி ) மாதங்கள் 12 ஆகும் . 1. முஹர்ரம் 2.சபர் 3.ரபீஉல் அவ்வல் 4.ரபீஉல் ஆகிர் 5.ஜுமாதுல் ஊலா 6.ஜுமாதுல் ஆகிரா 7.ரஜப் 8.ஷஃபான் 9.ரமழான் 10.ஷவ்வால் 11.துல் கஃதா 12.துல் ஹிஜ்ஜா இஸ்லாமிய     (அரபி ) மாதங்கள்    விரிவாக்கம் 1.முஹர்ரம்  முஹர்ரம் என்பதாக பெயர் வைக்கப்பட்ட காரணம்:- سمي   المحرم   لأن   العرب   قبل   الإسلام   كانوا   يحرّمون   القتال   فيه . இஸ்லாம்   மதத்திற்கு   முன்பு   அரேபியர்கள்   அங்கு   சண்டையிடுவதை   தடை   செய்ததால்   இது   முஹர்ரம்   என்று அழைக்கப்பட்டது . 2.சபfர்   சபfர் என்பதாக பெயர் வைக்கப்பட்ட காரணம்:- سمي   صفرا   لأن   ديار   العرب   كانت   تصفر   أي   تخلو   من   أهلها   للحرب   وقيل   لأن   العرب   كان   يغزون   فيه   القبائل   فيتركون   من   لقوا   صفر المتاع . அரேபிய ...

Who are the angels In Muslims ?

  • மலக்குமார்கள் என்றால் யார் ?

  •  மலக்குமார்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள் ஆவார்கள்.

  •  அவர்கள் இறைவனை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபடக் கூடியவர்கள்.

  •  வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. 

  • அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவர்கள் சோர்வடையவும் மாட்டார்கள். இரவிலும், பகலும் துதிப்பார்கள். சடப்படையவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 21:19,21) தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல் குர்ஆன் 66 :6) 

  •  மலக்குமார்களுக்கு இறை தன்மையோ மனிதத் தன்மையோ கிடையாது. அவர்கள் இறைவனின் பிள்ளைகளும் கிடையாது.

  •  மலக்குமார்கள் எதனால் படைக்கப்பட்டுள்ளனர்? 
  •  மலக்குமார்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆதாரம். நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர்........ அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் :முஸ்லிம் (5314)

  •  மலக்குமார்களுக்கு இறக்கைகள் உண்டா?
  •  ஆம். மலக்குமார்களுக்கு இறக்கைகள் உடையவர்களாக படைக்கப்பட்டுள்ளனர். இதனை பின்வரும் ஆதாரங்களில் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டுஇரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகு களைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 35:1) நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீல்(அலை) அவர்களை 600 இறக்கை உடையவர்களாகக் கண்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரழி) நூல் :புகாரீ(4857)

  •  மலக்குமார்கள் அல்லாஹ்வின் பெண்மக்களா? 
  •  மலக்குமார்கள் அல்லாஹ்வின் பெண்மக்கள் இல்லை. ஆதாரம் மறுமையை நம்பாதோர் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர். . (அல்குர்ஆன் :53:27) மலக்குமார்கள் ஆண்களும் அல்ல பெண்களும் அல்ல. அவர்கள் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அடியார்ககள் ஆவார்கள்.

  •  மலக்குமார்களின் எண்ணிக்கையை வரையறுக்க முடியுமா? மலக்குமார்களின் எண்ணிக்கைளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வரையறுத்துக் கூற முடியாது. நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போது ஏழாவது வானத்திற்கு வந்தார்கள். அங்கு நடந்ததைப் பற்றிக் கூறும்போது, எனக்கு பைதுல் மஃமூர் காட்டப்பட்டது. நான் அதைப் பற்றி ஜிப்ரயீடம் கேட்டேன். அவர் இது பைதுல் மஃமூர் ஆகும். இதில் நாள்தோறும் எழுபதினாயிரம் மலக்குமார்கள் தொழுகின்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அவர்களில் யாரும் அதில் நுழைவதில்லை என்று கூறினார்கள். நூல் : புகாரீ (3207) மேற் கூறிய ஹதீஸிருந்து வரையறுத்துக் கூறமுடியாத அளவிற்கு மிகஅதிகமான எண்ணிக்கையில் மலக்குமார்கள் உள்ளனர் என்பது தெளிவாகிறது. 

  •  குர்ஆனிலும், ஹதீஸிலும் பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள் எத்தனை பேர்? திருமறைக்குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் மொத்தம் நான்கு மலக்கு மார்களின் பெயர் கூறப்பட்டுள்ளது. 
  1. ஜிப்ரீல் (அலை): (அல்குர்ஆன் 2:98) 
  2. மிக்காயீல் (அலை) : (அல்குர்ஆன் 2:98)
  3. இஸ்ராஃபீல் (அலை) : (முஸ்லிம் 1289)
  4. மாக் (அலை) அல் குர்ஆன் (43:77)
  •  மலக்குமார்களின் பணிகள் என்ன?
  1. மலக்குமார்கள் இறைவனுடைய அனுமதியின் பிரகாரம் வஹீயை கொண்டு வருதல் 
  2. நன்மை, தீமைகளைப் பதிவு செய்தல் 
  3. உயிரைக் கைப்பற்றுதல் 
  4. பாதுகாவல் 
  5. அர்ஷைச் சுமப்பவர்கள் 
  6. நரகக் காவலாளிகள் 
  7. கருவறையில் விதியை எழுதுதல் 
  8. கப்ரில் விசாரணை செய்தல். போன்ற பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.

  •  மலக்குமார்கள் வஹியைக் கொண்டுவருகிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? 
  •  ”என்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்!” என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (அல்குர்ஆன் :16:2)

  •  மலக்குமார்கள் நன்மை, தீமைகளைப் பதிவு செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? 
  •  உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள். (அல் குர்ஆன் 82 :10,11,12) வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 50:17,18) 

  •  மலக்குமார்கள் உயிரைக் கைப்பற்றுகிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
  •  ”உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 32:11) 

  •  மலக்குமார்கள் பாதுகாவல் பணியைச் செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
  •  ”மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். (அல்குர்ஆன் 13:11)

  •  மறுமைநாளில் அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் எத்தனை பேர்?
  •  எட்டு மலக்குமார்கள் மறுமை நாளில் அர்ஷை சுமப்பார்கள். அதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். (அல்குர்ஆன் 69:17) 

  •  நரகத்தை காவல் காக்கும் மலக்குமார்கள் எத்தனை பேர்? 
  •  அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர். நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. (அல்குர்ஆன் 74:30,31)

  •  மலக்குமார்கள் தாயின் கருவறையில் விதியை எப்போது எழுதுகிறார்கள்?
  •  தாயின் வயிற்றிலுள்ள கரு, நான்கு மாதங்களை அடைந்ததும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவனுடைய வாழ்வாதாரங்கள், ஆயுள், செயல்கள் ஆகியவை எவ்வளவு என்றும் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பதையும் எழுதுமாறு கட்டளையிடுவான். நூல் : புகாரீ (7454)

  •  கப்ரில் விசாரணை செய்யும் மலக்குமார்கள் எத்தனை பேர்? 
  •  கப்ரில் மய்யித் வைக்கப்பட்டதும் இரு மலக்குகள் அதனிடம் வந்து அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும், நபி யார்? என்பதாகவும் கேள்விகளைக் கேட்பார்கள். நூல் : திர்மிதீ (991)

Comments